பல்லடத்தில் ஆட்டோ மீது கார், பேருந்து மோதி விபத்து - சிசிடிவி காட்சிகள் வெளியீடு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே திருச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ மீது கார் மற்றும் பேருந்து மோதி ஒருவர் பலியான விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. விபத்தில் ஆட்டோவில் பயணித்த சரோஜினி என்ற மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அண்ணா நகரில் வசித்து வருபவர் ஆட்டோ ஓட்டுநர் பிரேம்குமார். நேற்று இரவு ராமசாமி அண்ணாமலை நகரை சேர்ந்த சரோஜினி என்ற மூதாட்டியும் அவரது மகன் வெள்ளியங்கிரியும் திருப்பூர், அங்கேரிபாளையத்தில் திருமண நிகழ்வுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது பிரேம்குமாரின் ஆட்டோவில் பல்லடத்தில் இருந்து வீட்டிற்கு சென்றனர்.

மின் நகர் என்ற இடத்தில் சாலையை ஆட்டோ கடக்க முயன்றபோது பின்னால் வந்த கார் ஆட்டோ மீது மோதியுள்ளது.



நிலைகுலைந்து நின்ற ஆட்டோ மீது கோவையில் இருந்து கொடுமுடி செல்லும் அரசு பேருந்தும் மோதியது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த சரோஜினி என்ற மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆட்டோ ஓட்டுநர் பிரேம்குமார் மற்றும் மூதாட்டியின் மகன் வெள்ளியங்கிரி ஆகியோர் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இதையடுத்து, தற்போது திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு இருவரும் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.



நேற்று இரவு நடந்த இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. முதலில் ஆட்டோ மீது பின்னால் வந்த கார் மோதும் காட்சிகளும் எதிரே வந்த பேருந்து ஆட்டோ மீது மோதும் காட்சிகளும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இந்த விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் செல்லும் காட்சிகளும் பதிவாகி உள்ளன. விபத்துக்குள்ளான அரசு பேருந்தை பல்லடம் காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...