நாக்பூரில் குடிநீர் திட்ட கருத்தரங்கு - கோவை மாநகராட்சி குடிநீர் திட்டத்தை பாராட்டி நினைவுப்பரிசு!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை சார்பில் 24 மணி நேர குடிநீர் திட்டம் குறித்த கருத்தரங்கில், கோவை மாநகர குடிநீர் திட்டத்தின் நவீன செயல்முறைகளை பாராட்டி, நினைவு பரிசு வழங்கப்பட்டது.


கோவை: நாக்பூரில் நடைபெற்ற மத்திய அரசின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில், கோவை மாவட்ட குடிநீர் திட்டத்தை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின்‌ வீட்டு வசதி மற்றும்‌ நகர்ப்புற விவகாரங்கள்‌ துறையின்‌ சார்பில்‌ வட இந்தியாவின்‌ 10 மாநிலங்களுக்கான மண்டலத்திற்கான 24 மணி நேர குடிநீர்‌ திட்டங்கள்‌ குறித்த கருத்தரங்கு மஹாராஷ்டிரா மாநிலம்‌ நாக்பூரில்‌ நடைபெற்றது.

கடந்த பிப்ரவரி 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில்‌ நடைபெற்ற இந்த கருத்தரங்கில்‌, கோவை மாநகராட்சியின்‌ 24 மணி நேர குடிநீர்‌ திட்டம்‌ குறித்த பல நவீன செயல்முறைகளை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது.

இந்த நினைவு பரிசை, திட்ட மேலாண்மை ஆலோசனை குழு தலைவர்‌ கோபாலகிருஷ்ணன்‌, சூயஸ்‌ நிறுவன திட்ட மேலாளர்‌ சங்கராம்‌ பட்நாயக் மற்றும் புவியியல்‌ நிபுணர்‌ சத்யநலம்‌ ஆகியோர் மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்பிடம் வழங்கினர்.

கோவை மாநகராட்சியின் பிரதான அலுவலக கூட்டரங்கில், மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப் தலைமையில் நடைபெற்ற‌ நுகர்வோர்‌ அமைப்புகளுடனான ஆலோசனைக்‌ கூட்டத்தின் போது, நினைவு பரிசினை வழங்கினர்.



இந்த நிகழ்வின் போது, மாநகர பொறியாளர்‌ இளங்கோவன்‌ மற்றும்‌ மாநகராட்சி உயர்‌ அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...