கோவையில் டம்மி துப்பாக்கியை காட்டி திருநங்கைகளுக்கு மிரட்டல் - கேரள யூடியூபர்கள் மூவர் கைது!

கோவை கவுண்டம்பாளையத்தில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த திருநங்கைகளை டம்மி துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய கேரளாவை சேர்ந்த 3 யூடியூபர்களை கைது செய்த போலீசார், 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் கவுண்டம் பாளையம் அருகே டம்மி துப்பாக்கியை காட்டி திருநங்கைகளை மிரட்டிய கேரள யூடியூபர்கள் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரளா மாநிலத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் காரில் நேற்று இரவு கோவை கவுண்டம்பாளையம் பகுதிக்கு வந்துள்ளனர். அவர்கள் அந்த பகுதியில் சாலையோரம் நின்றிருந்த திருநங்கைகளை சீண்டியதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.



இதில், ஆத்திரம் அடைந்த திலீப் என்ற நபர் சினிமா சூட்டிங்கிற்கு பயன்படுத்தப்படும் பொய்யான ஏர்கன் பிஸ்டல் (ஸ்போர்ட்ஸ்) துப்பாக்கி எடுத்து திருநங்கைகளை மிரட்டியதாக தெரிகிறது.

இதை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து துடியலூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் துரைராஜ், அய்யாசாமி ஆகியோர், டம்மி துப்பாக்கியை பறிமுதல் செய்து மூன்று பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.



அதில், அவர்கள் 3 பேரும் கொல்லம் திருநெல்லை பாலக்காட்டை சேர்ந்த திலீப் (33), பாலக்காடு புதூர் டெம்பிள் வீதியை சேர்ந்த கிஷோர் (23), மாங்கரையை சேர்ந்த சமீர் (30) என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் குறும்படம் எடுப்பதும் மற்றும் யூடியூப் சேனல் நடிகர்கள் என்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

கேரளாவில் இருந்து ஊட்டி செல்லும்போது இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேர் மீதும், பெரியநாயக்கன்பாளையம் டி எஸ்.பி மற்றும் துடியலூர் ஆய்வாளர் ஞானசேகரன் நடத்திய விசாரணைக்கு பிறகு ஆயுத தடை சட்டம், கொலை மிரட்டல் உட்பட நான்கு பிரிவில் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...