காங்கேயம் அருகே சரக்குவேன் மீது லாரி மோதி பயங்கர விபத்து:ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சோகம்!

காங்கேயம் அருகே கோயிலுக்குச் சென்று திரும்பிய வேன் மீது லாரி மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே வேன் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காங்கேயம் அடுத்த ஓலப்பாளையத்தை சேர்ந்த கிட்டுச்சாமி குடும்பத்தினர், கொடுமுடி கோவிலுக்கு திதி கொடுக்க இன்று அதிகாலை சென்றுள்ளனர். திதி கொடுத்துவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கு வேனில், திரும்பிக் கொண்டிருந்தனர்.



அப்போது முத்தூர் அடுத்துள்ள வாலிபனங்காடு என்ற இடத்தில் திதி கொடுக்க சென்றவர்களை ஏற்றிவந்த சரக்கு வேன் மீது எதிரே வந்த லாரி பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.



இந்த விபத்தில் சரக்கு வேன் தலைக்குப்புற கவிழ்ந்ததில், அதிலிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கிட்டுசாமி, பூங்கொடி, தமிழரசி, சரோஜா ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு காங்கேயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



திதிகொடுக்க சென்றுவிட்டு வீடு திரும்பிய நபர்கள் சாலை விபத்தில் பலியான சம்பவம் ஓலப்பாளையம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...