கோவையில் மனம் திருந்திய குற்றவாளிக்கு உதவிய தன்னார்வலர்கள் - குவியும் பாராட்டு

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் மனம் திருந்திய முன்னாள் குற்றவாளியான சரஸ்வதி என்பவருக்கு 25 ஆயிரம் நிதியுதவி அளித்து, மறுவாழ்வுக்கு உதவிய தன்னார்வலர்களுக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டுத் தெரிவித்தனர்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்த்தவர் சரசா என்கிற சரஸ்வதி.

பிரபல கஞ்சா வியாபாரியான இவர் மீது பல்வேறு வழக்குகள் இருந்துள்ளன. தற்போது தமிழ்நாடு முதல் அமைச்சர் போதை பொருளுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக கஞ்சாவை அறவே ஓழிக்க வேண்டும் என்ற மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர் மற்றும் கோவை சரக காவல்துறை துணைத் தலைவர்விஜயகுமார் ஆகியோரின் அறிவித்தலின்படி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவுபடி போதை இல்லா கோவையை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மனம் திருந்திய முன்னாள் கஞ்சா வழக்கு குற்றவாளியான சரசா என்கிற சரஸ்வதி என்பவருக்கு மறுவாழ்வை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் அவர் வாழ்வை சுமூகமாக நகர்த்துவதற்கு உதவும் விதமாக பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயத்தின் முயற்சியினால், பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் தாமோதரன் மூலம் அப்பகுதியில் உள்ள பயனியர் பள்ளியில் 1987-1988 ஆண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள் உதவியுடன் சரஸ்வதிக்கு ரூபாய் 25,000/- (இருபத்தி ஐந்தாயிரம்) உதவித்தொகையாக வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில், அப்பள்ளியின் முன்னாள் மாணவர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னாள் மாணவர்களின் இந்த உதவியை காவல்துறை உயர் அதிகாரிகள் பெரிதும் பாராட்டினர். சரசா என்கிற சரஸ்வதி மீது கடந்த மூன்று ஆண்டுகளாக வழக்குகள் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மனமாற்றத்திற்கும், அவரது எஞ்சிய வாழ்க்கையை அமைதியான முறையில் நடத்தவும் இது உதவும் என காவல்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...