தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமனம் - பிரதமர் மோடிக்கு குஷ்பு நன்றி!

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள குஷ்பு, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் குஷ்பு-வுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



சென்னை: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நடிகை குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார்.

நடிகை குஷ்பு பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறார்.



இந்நிலையில், தற்போது, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பாஜகவினர் மற்றும் திரைத்துறையினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



இதுதொடர்பாக குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், இவ்வளவு பெரிய பொறுப்பை எனக்கு வழங்கிய பிரதமர் மோடிக்கும், இந்திய அரசாங்கத்திற்கும் எனது நன்றிகள். பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுக்க என்னால் முடிந்ததை செய்வேன், என்று குறிப்பிட்டுள்ளார்.



பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பதிவில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட குஷ்புவுக்கு தமிழக பாஜக சார்பில் வாழ்த்துகள். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமையை எதிர்த்து தொடர்ந்து போராடிய குஷ்புவுக்கு கிடைத்த அங்கீகாரம் என்று பாராட்டியுள்ளார்.



கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், பாஜக மகளிரணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் தனது டுவிட்டர் பதிவில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள குஷ்புவுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் பெண்களின் நலன்களை ஊக்குவிப்பீர்கள், பாதுகாப்பீர்கள் மற்றும் இந்த பொறுப்பில் முக்கிய பங்கு வகிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த புதிய பொறுப்புக்கு எனது வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...