உடுமலை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் இலவச சித்த மருத்துவ முகாம்

உடுமலை தலைமை அஞ்சலக பணியாளர்களுக்கு, உடுமலை அரசு மருத்துவமனை சித்தா பிரிவு சார்பில், இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை உடுமலை தலைமை அஞ்சலக அதிகாரி கீதா தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: உடுமலையில் அரசு மருத்துவமனை சித்தா பிரிவு சார்பில், இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தலைமை அஞ்சலக பணியாளர்களுக்காக உடுமலை அரசு மருத்துவமனை சித்தா பிரிவு சார்பில், இலவச சித்த மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமை உடுமலை தலைமை அஞ்சலக அதிகாரி கீதா தொடங்கி வைத்தார். உதவி அஞ்சலக அதிகாரி செல்வராஜன் முன்னிலை வகித்தார்.

இம்முகாமில், உடுமலை தலைமை அஞ்சலக பணியாளர்கள், சுற்றுப்பகுதியைச் சேர்ந்த, கிளை அஞ்சலகத்தைச் சேர்ந்த பணியாளர்கள், ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்றனர்.

சித்த மருத்துவர்கள், கார்த்திகேயன், ஸ்ரீபப்பி, மருந்தாளுநர் பெனிலா, மருத்துவமனை பணியாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட குழுவினர், சிகிச்சை மற்றும் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

முகாமிற்கான ஏற்பாடுகளை, அரசு மருத்துவ மனை சித்த மருத்துவ அலுவலர் லட்சுபதிராஜ், ஓய்வு பெற்ற அஞ்சலர் முகமது அலி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...