உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் அதிகரித்துள்ள ஆக்கிரமிப்பு - பயணிகள் அவதி!

உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள நடைபாதை மற்றும் பயணிகள் அமரும் இடங்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் அமைத்துள்ளதால் பயணிகள் அமர்வதற்கு இடமின்றி அவதிக்குள்ளாகி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.


திருப்பூர்: உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பால் சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையத்துக்கு தினசரி நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன. சுற்றுவட்டார கிராமங்களுக்கும், பழநி, பொள்ளாச்சி, திருப்பூர், தாராபுரம், பல்லடம் மற்றும் தென் மாவட்டங்களுக்கும் உடுமலை வழியாகப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதேபோல் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் உடுமலை பேருந்து நிலையத்துக்கு வருகின்றனர். பேருந்து நிலையத்தில் 5 வழிகள் உள்ளன. இங்குள்ள வணிக வளாகத்தில், பயணிகள் அமரும் இடத்தை பலர் ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். இதனால் பயணிகள் ஒதுங்க இடமின்றி சிரமப்படுகின்றனர்.

தட்டிக்கேட்கும் பயணிகளை கடைக்காரர்கள் மிரட்டி வருகின்றனர். எனவே, பயணிகளுக்கு இடையூறாக செயல்படும் கடைக்காரர்கள் மீது நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...