கோவையிலிருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - இருவர் கைது!

கோவையிலிருந்து கேரளாவிற்கு ஆம்னி வேனில் கடத்தப்பட்ட 1.5டன் ரேஷன் அரிசியை வேனுடன் பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட 17வயது சிறுவன் உட்பட இருவரை கைது செய்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவையிலிருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 1.5 டன் ரேஷன் அரிசியை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோவையிலிருந்து வாகனங்கள் மூலம் கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இதைத் தடுக்க கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி உத்தரவின் பேரில், டிஎஸ்பி கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் மேனகா, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படையினர் சேரன் மாநகர் விளாங்குறிச்சி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்தபோது அதனுள் சுமார் 30 மூட்டைகளில் சுமார் 1,500 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. அதில் சுமார் 21 மூட்டைகள் தமிழ்நாடு அரசால் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படும் சாக்குப் பைகளில் இருந்தது.

இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில், காளப்பட்டி கரையான் பாளையத்தை சேர்ந்த பாபு என்பவர், 17 வயது சிறுவனை உடன் வைத்துக் கொண்டு, ரேஷன் கடைகளில் அரிசியை குறைந்து விலைக்கு வாங்கி கேரள மாநிலத்திற்கு கடத்தியது தெரியவந்தது.

கைப்பற்றப்பட்ட அரிசி சேரன் மாநகர் சிவசக்தி நகர் பகுதியில் உள்ள ரேஷன் கடையிலிருந்து அதன் விற்பனையாளர் கோபாலன் என்பவர் மூலமாக குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை பெற்று, அதனை சட்டவிரோதமாக கேரளாவிற்கு கடத்திச் சென்றதும் அம்பலமானது.

கடத்தப்பட்ட ரேஷன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்னி வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் ஆம்னி வேனை ஓட்டி வந்த 17 வயது சிறுவன் மற்றும் இந்த கடத்தலுக்கு உடந்தையாக இருந்த காளப்பட்டி நகர கூட்டுறவு கடன் சங்க ரேஷன் கடை விற்பனையாளர் கோபாலன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தலைமறைவாக உள்ள கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட பாபு என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...