தாராபுரத்தில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் தாலி பறிப்பு - துணிகர திருடனுக்கு போலீஸ் வலை

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மளிகை கடை உரிமையாளரின் மனைவி நந்தினி கழுத்தில் இருந்த ரூ 2.70 லட்சம் மதிப்புள்ள தங்க தாலியை மர்ம நபர் பறித்துச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் செல்லும் சாலையில் ராம் நகரில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருபவர் ராஜா (வயது38). இவரது மனைவி நந்தினி (வயது28). நேற்று இரவு மளிகை கடையில் வியாபாரம் முடித்துவிட்டு கடையின் அருகிலேயே புதிதாக கட்டிய ராஜாவின் வீட்டில் கணவன் மனைவி இருவரும் உறங்கிக் கொண்டிருந்தனர்.



நள்ளிரவில் வீட்டின் வெளிப்பக்க கதவின் பூட்டை உடைத்த மர்ம நபர், கதவின் கண்ணாடி கிரில் வழியாக கையை உள்ளே நுழைத்து சோபா கம்பெனியின் மீது வைக்கப்பட்டிருந்த வீட்டு கதவின் சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே நுழைந்து அனைத்து அறைகளிலும் தேடியுள்ளார். அங்கு எந்த பொருளும் கிடைக்காத நிலையில், உறங்கிக் கொண்டிருந்த நந்தினியின் கழுத்தில் அணிந்திருந்த ஆறரை சவரன் தங்கத் தாலி கொடியை பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளார்.

திடுக்கிட்டு விழித்து எழுந்த நந்தினி, திருடனை பார்த்து அலறி கூச்சலிட்டார். அதற்குள் காம்பவுண்ட் சுவரை தாண்டி குதித்து மர்ம நபர் தப்பி ஓடி தலைமறைவானார். நட்ட நடு இரவில் வீடு புகுந்து வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நந்தினியின் கழுத்தில் இருந்த தங்கத் தாலி கொடியை பறித்துச் சென்ற துணிகர சம்பவம் தாராபுரம் பகுதியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

கொள்ளைபோன தாலிக்கொடியின் மதிப்பு ரூ 2 லட்சத்து 70 ஆயிரம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த தாராபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தனராஜ் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு, தப்பியோடிய திருடனை வலைவீசித் தேடிவருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...