பொள்ளாச்சியில் மண்ணெண்ணெய் விநியோக நிலையத்தில் முறைகேடு - பொதுமக்கள் முற்றுகை!

பொள்ளாச்சி ஜோதி நகர் பகுதியில் உள்ள நுகர்வோர் வாணிபக்கழகத்தில் மண்ணெண்ணெய் முறையாக விநியோகம் செய்யாமல் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதால், முறைகேடு நடப்பதாக கூறி பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நுகர்வோர் வாணிபக்கழக மண்ணெண்ணெய் விநியோக நிலையத்தில் முறைகேடு நடப்பதாக கூறி பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி ஜோதி நகரில் தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகத்தின் கீழ் மண்ணெண்ணெய் விநியோகம் செய்யும் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஜோதி நகர், காமாட்சி நகர், PKS காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் மாதம் மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்படுவதில் தொடர்ந்து முறைகேடு ஏற்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்த மாதம் மண்ணெண்ணெய் பெறுவதற்காக வந்த பொதுமக்களுக்கு மண்ணெண்ணெய் வழங்காமல் ஊழியர்கள் மண்ணெண்ணெய் இல்லை எனக்கூறி அலைக்கழித்து வரும் சம்பவங்கள் தொடர்கதையாகியுள்ளது.



இந்நிலையில், இன்று காலை முதல் நீண்ட நேரமாக காத்திருந்த பொதுமக்களிடம் அங்கிருந்த ஊழியர்கள் மண்ணெண்ணெய் இல்லை என கூறியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மாலையில், முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



இதனிடையே அங்கு வந்த வாணிபக் கழக மேற்பார்வையாளர் மணிகண்டன் பொதுமக்களை ஒருமையில் பேசியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.



கூலி வேலை செய்து வரும் ஏழை எளிய மக்கள் வயதானவர்கள் ஒரு லிட்டர் மண்ணை பெறுவதற்காக மாதக்கணக்கில் அலைய வேண்டிய நிலை உள்ளது கால் கடுக்க காத்திருந்தாலும் மண்ணெண்ணெய் வழங்குவதில்லை தட்டி கேட்டால் ஊழியர்கள் ஒருமையில் பேசி அலட்சியப்படுத்தி வருவதாகவும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யாமல் முறைகேடு செய்வதாகவும் எனவே உயர் அதிகாரிகள் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முறையாக மண்ணெண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...