மடத்துக்குளம் அருகே பெண்களுக்கெதிரான வன்முறை குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம்

தேசிய மகளிர் ஆணையம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழு இணைந்து நடத்திய பெண்ணுரிமை மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறை பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் இன்று மடத்துக்குளம் வட்டம் பாப்பான் குளம் ஊராட்சியில் நடைபெற்றது.


திருப்பூர்: மடத்துக்குளம் அருகே பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் பாப்பான் குளம் ஊராட்சியில் தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலின்படி, தேசிய மகளிர் ஆணையம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழு இணைந்து நடத்திய பெண்ணுரிமை மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறை பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது.



இதில் உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், சார்பு நீதிபதியுமான மணிகண்டன் தலைமை வகித்தார்.



மாவட்ட உரிமையியல் நீதிபதி பாலமுருகன், உடுமலைப்பேட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-1 நீதிபதி விஜயகுமார், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-2 நீதிபதி மீனாட்சி, பட்டியல் வழக்கறிஞர்கள் மகேஸ்வரன், மகாலட்சுமி,சத்தியவாணி மற்றும் சிவகாமி தலைமை ஆசிரியர், கெங்கநாயக்கன் பாளையம், மற்றும் நிவேதிகாகிட்ஸ் கிளப், பொதுமக்கள் இந்த சட்ட விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...