கோவையில் கஞ்சா விற்பனை செய்த 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது - தனிப்படை போலீசார் அதிரடி!

கோவை ரத்தினபுரியில் சூரிய பிரகாஷ், மோனிஷா ஆகியோரின் வீடுகளில் இருந்து 1 கிலோ 950 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கார், இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, இவர்கள் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.



கோவை: கோவையில் போதை பொருள் புழக்கத்தை தடுக்கவும் கஞ்சா விற்பனையை ஒடுக்கவும் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையிலும் தணிக்கையிலும் ஈடுபட்டுவருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, ரத்தினபுரி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் மீனா குமாரி, சப் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் உள்ளிட்ட போலீசார் அடங்கிய தனிப்படை வாகனங்களிலும் வீடுகளிலும் தீவிர தணிக்கையில் ஈடுபட்டது.

அப்போது சூரிய பிரகாஷ் என்ற இளைஞரின் வீட்டில் தணிக்கை செய்தபோது, 450 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய பிரகாசை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், சிலர் கஞ்சா விற்பது தெரியவந்தது.



அதன் அடிப்படையில், மோனிஷா என்ற இல்லத்தரசி பெண் வீட்டில் போலீசார் தணிக்கை செய்தபோது, ஒரு கிலோ 500 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோன்று தேவி ஸ்ரீ, பியூட்டிசியன் பத்மா உள்ளிட்டோரும் கஞ்சா வளர்க்கக்கூடிய நபர்களுக்கு கஞ்சா விற்கும் நபர்களாக இருந்தது தெரியவந்தது. உடனடியாக நான்கு பேரையும் கைது செய்த தனிப்படை போலீசார் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர்.

விசாரணை அடிப்படையில் இவர்களுக்கு மேலே உள்ள தலைவன் கஞ்சா பிரியர்களிடம், இவர்களின் முகவரியை தெரிவித்து வீடுகளுக்கே வந்து கஞ்சாவை வாங்கிச் சென்றது தெரியவந்தது.



நான்கு பேரிடமிருந்தும் 1 கிலோ 950 கிராம் கஞ்சா பாக்கெட்டுகள், கார், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றையும் தனிப்படையினர் பறிமுதல் செய்தனர். இடைத்தரகர்கள் போல செயல்பட்டு வந்த இவர்களின் பின்னணியில் உள்ள கஞ்சா வியாபாரிகளின் தலைவனை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...