உடுமலையில் 'அறிவொளி சுடர்கள்' நூல் வெளியீடு - பள்ளி மற்றும் நூலகங்களுக்கு புத்தகம் வழங்கல்!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடைபெற்ற 'அறிவொளி சுடர்கள்' நூல் வெளியீட்டு விழாவில் முன்னாள் மாவட்ட ஆட்சியர் ச.வி.சங்கர் கலந்து கொண்டு நூலை வெளியிட்டார். இதனையடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 'அறிவொளி சுடர்கள்' நூல் வழங்கப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடைபெற்ற அறிவொளி சுடர்கள் நூல் வெளியீட்டு விழாவில் முன்னாள் மாவட்ட ஆட்சியர் ச.வி.சங்கர் கலந்து கொண்டார்.

அறிவொளி இயக்கம் என்ற அமைப்புகள் கடந்த 1992ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு முழுவதும் கல்வி சேவையாற்றியது. இந்த அமைப்பில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான தன்னார்வலர்கள் கலந்து கொண்டு சேவைகளில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், அறிவொளி இயக்கம் 30 ஆண்டுகள் நிறைவையொட்டி, கோவையில் சமீபத்தில் அறிவொளி இயக்க குடும்ப விழா நடைபெற்றது. இந்த விழாவில் கடந்த 30 ஆண்டுகளாக அறிவொளி இயக்கத்தின் களப்பணிகளை தொகுத்து அறிவொளி சுடர்கள் என்ற நூல் வெளியிடப்பட்டது.



இதனிடையே, உடுமலையில் அறிவொளி சுடர்கள் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில், முன்னாள் கோவை மாவட்ட ஆட்சியரும் அறிவொளி திட்ட தலைவருமான ச.வி.சங்கர் கலந்து கொண்டு நூல் வெளியீட்டு விழாவை சிறப்பித்தார்.



இந்த நூல் அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் உடுமலை பகுதி நூலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு அறிவொளி சுடர்கள் நூல் வழங்கப்பட்டது.



இதை உடுமலை முன்னாள் அறிவொளித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவராஜ், குடிமங்கலம் ஒன்றிய திட்ட ஒருங்கிணைப்பாளர் மணி, பணி நிறைவு நூலகர் கணேசன் ஆகியோர் மலையாண்டிபட்டினம் நூலகம், மலையாண்டிபட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளி, உடுமலை கிளை நூலகம் 2 மற்றும் 3 நூலகங்களுக்கும் அறிவொளி சுடர்கள் நூல்களை வழங்கினர்.

இதேபோல் மற்ற நூலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கும் அறிவொளி சுடர்கள் நூல்கள் வழங்கப்பட உள்ளதாக சிவராஜ் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...