திருமூர்த்தி அணையில் உள்ள சிறுவர் பூங்காவை சீரமைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை

உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணைப் பகுதியில் போதிய பராமரிப்பு இல்லாததால், புதர் சூழ்ந்து மற்றும் சேதம் அடைந்து காணப்படும் சிறுவர் பூங்காவைச் சீரமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருமூர்த்தி அணைப் பகுதியில் உள்ள சிறுவர் பூங்காவைச் சீரமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி மலை உள்ளது. இங்குள்ள அமண லிங்கேஸ்வரர் கோவிலுக்குச் செல்லும் வழியில் வண்ண மீன் காட்சியகம், சிறுவர் பூங்கா, படகு இல்லம், நீச்சல் குளம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.



இதில் நீச்சல் குளம் மட்டும் தற்போது வரையிலும் செயல்பாட்டிலிருந்து வருகிறது. சிறுவர் பூங்கா போதிய பராமரிப்பு இல்லாததால் புதர் சூழ்ந்தும், அதில் உள்ள உபகரணங்கள் மற்றும் விலங்குகளின் சிலைகள் சேதம் அடைந்தும் உள்ளன.



அதை சீரமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர பலமுறை கோரிக்கை விடுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டதற்கான நோக்கமும் மக்களின் வரிப் பணமும் வீணாகி வருகிறது.



எனவே திருமூர்த்தி அணை அருகே பூட்டப்பட்டுள்ள சிறுவர் பூங்காவை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமூர்த்தி அணைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...