வால்பாறை அக்காமலை புல்மலை வனப்பகுதியில் காட்டுத்தீ - ஒருவர் கைது

கோவை மாவட்டம் வால்பாறை அருகிலுள்ள அக்காமலை புல்மலைப்பகுதியில், சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்திற்கு காரணமான கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ராஜீவ்காந்தி என்பவரை கைது செய்து, விசாரணை நடைபெற்று வருகிறது.


கோவை: கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வால்பாறை வனப்பகுதியில் உள்ள அக்காமலை புல் மலைகளில் சில நாட்களுக்கு முன்பு திடீரென காட்டு தீ பரவியது. வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் தலைமையிலான சிறப்புக் குழு, வனவர் அய்யாசாமி மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்களுடன் இணைந்து தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் ஆய்வு செய்ததில், மனிதனால் உருவாக்கப்பட்ட காட்டுத் தீ, இதற்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

இதையடுத்து, வன பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் ராமசுப்ரமணியன் மற்றும் துணை இயக்குநர் பார்கவ தேஜா அறிவுறுத்தலின்படி அனைத்து சோதனைச் சாவடிகள் மற்றும் பிற வனப் பகுதிகளில் ஏதேனும் சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டம் உள்ளதாக எனக் கண்காணிக்கப்பட்டது.



இந்நிலையில், கேரளா மறையூரில் இருந்து அக்காமலை புல் மலை வழியாக பொள்ளாச்சிக்கு சந்தன மரக் கட்டைகளை கடத்திய குற்றத்திற்காக பொள்ளாச்சியில் கடந்த மாதம் 27ம் தேதி அன்று கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ராஜீவ்காந்தி (வயது 42) என்ற நபர் பிடிபட்டார்.



வால்பாறை வன சரகர் வெங்கடேஷ், பிடிபட்ட கே.ராஜீவ் காந்தி என்பவரிடம் விசாரணை செய்ததில், கடந்த 25ஆம் தேதி அக்காமலை புல் மலையில் ஏற்பட்ட காட்டுத் தீக்கு காரணம் தான்தான் என்றும், கேரளா-மறையூரில் இருந்து பொள்ளாச்சிக்கு அக்காமலை புல்மலை வழியாக சந்தன மரக்கட்டைகளை தடையின்றி கடத்துவதற்காகவும், வன ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பும் வகையிலும் வைக்கப்பட்டதாகவும் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இது தொடர்பாக, ஆனைமலை புலிகள் காப்பகம், வால்பாறை சரகம் சார்பில் புல்மலை தேசிய பூங்காவில் தீ வைத்த குற்றத்திற்காக ராஜீவ்காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...