கோவையில் மார்ச் 5-ல் தேசிய சாராஸ் கண்காட்சி - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பதாக தகவல்

கோவையில் வரும் மார்ச் 5 முதல் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ள தேசிய சாராஸ் கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதில் நாடு முழுவதும் உள்ள சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்த பொருட்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளன.



கோவை: கோவையில் வரும் 5ஆம் தேதி தொடங்க உள்ள தேசிய அளவிலான சாராஸ் கண்காட்சியினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

கோவை வ.உ.சி மைதானத்தில் வரும் 5ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை தேசிய அளவிலான மகளிர் சுய உதவிக் குழுக்கள் பொருட்களின் சாராஸ் கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மத்திய ஊரக வளர்ச்சித் துறையானது கிராமப்புற கைவினை கலைஞர்கள் தங்களின் தயாரிப்பு பொருட்களை காட்சிப்படுத்தவும், விற்பனை செய்ய ஏதுவாக பல்வேறு மாநில அரசுகளுடன் இணைந்து தேசிய அளவிலான சாராஸ் கண்காட்சி அவினாசி சாலை வஉசி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

வரும் 5ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த கண்காட்சி தினமும் காலை 10:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை நடைபெறும். இந்த கண்காட்சியில் தினந்தோறும் மாலையில் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

இந்த கண்காட்சியை காண வரும் அனைவருக்கும் நுழைவு கட்டணம் ஏதுமில்லை. கண்காட்சியில் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 200-க்கு மேற்பட்ட சுய உதவிக்குழுக்கள் தங்கள் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளன.

இதில், கைவினைப்பொருட்கள், கைத்தறி புடவைகள், சணல், வாழைநார் மற்றும் துணிப்பைகள், மசாலா பொருட்கள், இயற்கை உணவு பொருட்கள், பனை வெல்லம், திண்பண்டங்கள், எண்ணெய் வகைகள், கால்மிதியடிகள், ஐம்பொன் மற்றும் அலங்கார நகைகள், மூலிகை பொருட்கள், பூஜை பொருட்கள், இயற்கை வலி நிவாரணிகள், மென்பொம்மைகள், மற்றும் கிருமிநாசினிகள் போன்ற பல்வேறு மகளிர் சுய உதவி குழுக்கள் உற்பத்தி செய்த பொருட்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளது.

இந்த கண்காட்சியில் ஊரகப்பகுதிகளில் உள்ள சுய உதவிக்குழுக்கள் தங்களது உற்பத்தி பொருட்களுடன் கலந்து கொள்ள Exhibition.mathibazaar.com/login என்ற இணையதளத்தில் தங்களது விவரங்களை வரும் மார்ச் 4ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...