உடுமலை அருகே இறைச்சி கழிவுகளை ஏற்றிவந்த கேரள லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்!

கேரளாவில் இருந்து சட்ட விரோதமாக இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த இரண்டு வாகனங்களை உடுமலை அடுத்த கணபதி பாளையம் பிரிவு அருகே பொதுமக்கள் சிறைபிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அனுமதியின்றி கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த இரண்டு லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.

உடுமலை அடுத்துள்ள பொள்ளாச்சி சாலையில் கணபதி பாளையம் பிரிவு பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான உர கிடங்கு உள்ளது. இந்த உரக்கடங்கில் நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து இயற்கை உரமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே சட்டத்திற்கு புறம்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியின்றி அதிக அளவு கேரளா, ஓசூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து இறைச்சி கழிவுகள் கொண்டு வந்து உரக்கிடங்கில் இரவு நேரத்தில் இயந்திரம் மூலம் அரைத்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால் அருகிலுள்ள கணபதி, பாளையம் மற்றும் வெனசப்பட்டி உள்ளிட்ட கிராம மக்களும் அருகில் வசிக்கும் தோட்டத்து சாலைப் பகுதியில் வசிக்கும் விவசாயிகளும் கடுமையான பாதிப்பு அடைந்து வருகின்றனர். மேலும் துர்நாற்றம் மூச்சு திணறல், நிலத்தடி நீர் மட்டம் பாதிப்பு உள்ளிட்ட இன்னல்களுக்கும் ஆளாகி வருகின்றனர்.



இந்த நிலையில் கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகள் கொண்டு வந்த இரண்டு வாகனங்களை சிறை பிடித்து விவசாயிகள் உடுமலை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இறைச்சிக் கழிவுகள் தொடர்ந்து கொண்டு வந்து அரைத்து பவுடர் செய்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் கடும் பாதிப்பு அடைந்து வருவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இறைச்சிக் கழிவுகள் அரைப்பதை நிறுத்த வேண்டும். இல்லை என்றால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும், என்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...