அமராவதி அணையில் இருந்து மார்ச் 31வரை தண்ணீர் திறக்க தமிழக அரசு அரசாணை!

உடுமலையில் உள்ள அமராவதி அணையில் இருந்து மார்ச்.2 முதல் வரும் 31ஆம் தேதி வரை தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ள தமிழக அரசு, 453.60 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட ஆணை பிறப்பித்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையில் இருந்து பாசன வசதிக்காக மார்ச்.2 முதல் 31ஆம் தேதி வரை தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.



இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திருப்பூர் மாவட்டம் அமராவதி ஆற்றில் உள்ள 8 பழைய ராஜ வாய்க்கால் பாசன பகுதிகளில் கதிர் நிலையில் உள்ள நெற்பயிர்களுக்கு அமராவதி அணையிலிருந்து அமராவதி ஆற்று மதகு வழியாக விவசாயிகள் கோரிக்கையை ஏற்று இன்று முதல் 31ஆம் தேதி வரை தண்ணீர் திறக்க காலநீட்டிப்பு செய்யப்படுகிறது.



மொத்தம் 31 நாட்களில் 21 நாட்கள் தண்ணீர் திறப்பு, 10 நாட்கள் தண்ணீர் அடைப்பு என்ற அடிப்படையில் மொத்தம் 453.60 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 7520 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...