கோவை பேருந்தில் மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி பறிப்பு - மர்ம நபருக்கு போலீஸ் வலை

கோவை வடவள்ளியை சேர்ந்த மூதாட்டி சாந்தகுமாரி, உக்கடத்திற்கு பேருந்தில் செல்லும்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவர் கழுத்தில் அணிந்திருந்த 3.5 சவரன் நகையை திருடிச் சென்ற நபரை உக்கடம் போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் மூதாட்டி சாந்தகுமாரி (வயது62). இவர் டவுன்ஹால் பகுதிக்கு தனிப்பட்ட வேலையாக சென்றார்.

வேலையை முடித்துவிட்டு வடவள்ளி செல்வதற்காக டவுன்ஹாலில் இருந்து உக்கடத்திற்கு ரூட் நெம்பர் 33 பேருந்தில் அவர் ஏறி பயணித்துள்ளார்.

பேருந்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்த நிலையில், மூதாட்டி உக்கடம் பேருந்து நிலையத்தில் இறங்கியுள்ளார்.

அப்பொழுது தன் கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை சவரன் தங்க சங்கிலி மாயமானதை அறிந்து அதிர்ச்சியடைந்த அவர், பேருந்து நிலையம் அருகே உள்ள உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேருந்து கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மூதாட்டியிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் வடவள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...