தொண்டாமுத்தூர் அரசுக் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் தொடக்கம்

தொண்டாமுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் தொடங்கப்பட்டது. இதில் கல்லூரியினுடைய முன்னாள் முதல்வர் பேராசிரியர் அன்பழகன் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.



கோவை: தொண்டாமுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் தொடங்கப்பட்டது.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முனைவர் பாபு மேலாண்மைத் துறை தலைவர் வரவேற்புரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய கல்லூரியினுடைய முதல்வர் முனைவர் தேவராஜ் அருமை நாயகம், இளம் வயதிலேயே பிறருக்கு உதவும் எண்ணத்தை வளர்த்து தன்னை போல் பிறரை நேசிக்க வேண்டும் என்று தலைமை உரை நிகழ்த்தினார்.



அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியின் முதன்மை விருந்தினரான முனைவர். அகிலா இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத்தின் கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் பாரதியார் பல்கலைக்கழகம் அவர்கள் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத்தை தொடக்கி வைத்து கல்வியின் மூலம் மாணவர்கள் தங்களின் திறமைகளை வளர்த்து நாட்டை வல்லரசாக முயன்றிட வேண்டும் என்று அப்துல்கலாமின் பொன்மொழிகளின் வழி சிறப்புரை வழங்கினார்.



இதனைத் தொடர்ந்து கல்லூரியினுடைய முன்னாள் முதல்வர் பேராசிரியர் அன்பழகன் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். அவர் தனது சிறப்புரையில் மாணவர்கள் அறிவோடு அன்பையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அன்பின் வழியது உயிர்நிலை என்ற கருத்தை முன் வைத்தார். அரசு கலைக் கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத்தின் திட்ட அலுவலர் முனைவர் சிவச்சந்திரன் நன்றியுரை நிகழ்த்தினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...