60 வழக்குகளில் தேடப்படும் குற்றவாளி - பொள்ளாச்சி போலீசாரிடம் சிக்கிய பலே திருடன்!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் திருட்டு, கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த அறந்தாங்கியை சேர்ந்த லட்சுமணன் என்பவர், பொள்ளாச்சி போலீசாரிடம் சிக்கினார். போலீசாரை பார்த்து தப்பியோடிய அவரை 2 கிலோமீட்டர் துரத்திச் சென்று போலீசார் கைது செய்தனர்.


கோவை: பொள்ளாச்சியில் ரோந்து பணியின் போது போலீசாரை கண்டதும் தப்ப முயன்ற திருடனை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் ரவுண்டானா பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து வேகமாக சென்றுள்ளார்.



இதைப்பார்த்த போலீசார் 2 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று, அந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். அவர், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சேர்ந்த லட்சுமணன்(44) என்பதும், இவர் மீது 60-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பதும் தெரியவந்தது.

திருட்டு வழக்கில் வாய்தாவுக்காக வந்த லட்சுமணன் அரசு மருத்துவமனையில் இரு சக்கர வாகனத்தையும், புளியம்பட்டி பகுதியில் உள்ள தேநீர் கடையின் பூட்டை உடைத்து 1,270 ரூபாய் பணத்தையும் திருடியது தெரிய வந்துள்ளது.

பின்னர் அவரிடமிருந்து இரு சக்கர வாகனம் மற்றும் ரூ.1,270 பணம், திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவதற்காகப் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள், முகமூடி, கையுறை போன்ற பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

மேலும் வழக்குப் பதிவு செய்துள்ள மகாலிங்கபுரம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...