கோவைபுதூர் பகுதியில் காட்டுயானைகள் உலா - பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!

வனப்பகுதியில் இருந்து வெளியேறி கோவை புதூர் பிரஸ் என்கிலேவ் பகுதியில் புகுந்த மூன்று காட்டு யானைகளை அப்பகுதி மக்கள் வனப்பகுதிக்குள் விரட்டினர். இரவு நேரத்தில் மீண்டும் யானைகள் வர வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்கும்படி வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.


கோவை: கோவைபுதூர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மூன்று காட்டுயானைகளைப் பொதுமக்கள் விரட்டியடித்தனர்.

கோடைக் காலம் துவங்கியது முதல் வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்புகளுக்குள் அவ்வப்போது காட்டு யானைகள் தண்ணீர் தேடி வரத்துவங்கி உள்ளது. ஏற்கனவே வனத்துறை சார்பில் எல்லைகளில் தொட்டிகள் அமைக்கப்பட்டு தண்ணீர் ஊற்றப்பட்டுள்ளது.

இருப்பினும் ஒரு சில நேரங்கள் காட்டு யானைகள் குடியிருப்புக்குள் புகுந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு கோவைப்புதூர் அருகே உள்ள பிரஸ் என்கிலேவ் பகுதிகளுக்குள் புகுந்த மூன்று காட்டு யானைகள் தண்ணீர் தேடியுள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் கூச்சலிட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.

இரவு நேரத்தில் மீண்டும் வருமோ என்ற அச்சத்தில் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர். இதை அடுத்து அப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் இரவு நேரங்களில் அப்பகுதியில் பொதுமக்கள் கவனமாகச் செல்ல வேண்டுமென வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...