கோவையில் கூடுதல் தெருநாய்கள் கருத்தடை மையங்கள் அமைக்க திட்டம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோவை மாநகராட்சியில் ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் கீழ் 5,000 தெருநாய்களுக்கு கருத்தடை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், இதற்காக கூடுதலாக தெருநாய்கள் கருத்தடை மையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் மாநகராட்சி ஆணையர் பிரதாப் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சியில் கூடுதலாக தெருநாய்கள் கருத்தடை மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட உக்கடம், ராமநாதபுரம், ஸ்ரீபதி நகர், கரும்புகடை, ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நாய்கள் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்துவதால் அச்சத்தில் சிலர் தடுமாறி கீழே விழுந்து காயமடையும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில் தெருநாய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அந்த பகுதிகளில் உள்ள குழந்தைகள் தனியாக நடக்க முடியாமல் தவிக்கின்றனர்.

சமீபத்தில், ரோஸ் கார்டன் பகுதியில் இதுபோன்ற ஒரு வழக்கு பதிவாகியுள்ளது. அங்கு ஒரு சிறுமியை இரவில் நாய்கள் சூழ்ந்த நிலையில், சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து காப்பாற்றினர்.

இந்நிலையில், ஒண்டிப்புதூர், சீரநாயக்கன்பாளையம், உக்கடம் ஆகிய இடங்களில் தெருநாய் கருத்தடை மையம் செயல்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 50 தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு சுமார் 2,500 தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது.

இந்த ஆண்டு மண்டலத்துக்கு 1000 வீதம் 5000 தெருநாய்களுக்கு கருத்தடை செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக மாநகராட்சி மூலம் ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இதுகுறித்து பேசிய கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் கூறியதாவது, பொது பாதுகாப்பை உறுதி செய்வதிலும், தெருநாய் பிரச்சினைகளை கட்டுப்படுத்துவதில் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறோம். ஆனால், இப்பிரச்சினையை முழுவதுமாக ஒழிக்க முடியவில்லை.

கருத்தடை மையத்தை மேலும் விரிவுபடுத்தும் பணியில் எங்கள் குழு செயல்பட்டு வருகிறது. நகரில் மேலும் இரண்டு மையங்களை முன்மொழியும் திட்டம் பரிசீலனையில் உள்ளது, முடிந்தால் நடப்பு ஆண்டு பட்ஜெட்டில் இது குறித்து அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...