மடத்துக்குளம் அருகே கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டி - போராடி உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்

மடத்துக்குளம் அருகேயுள்ள மெட்ராத்தி பகுதியில் 80 அடி கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டியை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போராடி உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினருக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே 80 அடி கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டியை வனத்துறையினர், ஒரு மணி நேரம் போராடி உயிருடன் காப்பாற்றினர்.

மடத்துக்குளம் அடுத்த மெட்ராத்தி பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. விவசாயியான இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது 6 மாதம் வயதுடைய நாட்டு காளைக்கன்று ஒன்று எதிர்பாராத விதமாக தோட்டத்திலுள்ள கிணற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது.

சுமார் 80 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் சுமார் 40 அடி அளவுக்கு தண்ணீர் இருந்தது. இந்நிலையில், தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த கன்றுக்குட்டியை மீட்க முடியாத நிலையில், உடுமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.



உடனடியாக நிலைய அலுவலர் கோபால் தலைமையில் விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் கயிறுகள் உதவியுடன் கிணற்றில் இறங்கி ஒரு மணி நேரம் போராடி கன்றை பத்திரமாக மீட்டனர்.



கிணற்றில் தத்தளித்த கன்றுக்குட்டி மீட்கப்பட்டவுடன் கிணற்றின் அருகே நின்றிருந்த தாய்ப்பசுவிடம் உற்சாகமாய் தாய்ப்பால் அருந்தியது அனைவரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.

மடத்துக்குளம் பகுதியில் கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டியை பத்திரமாக உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி விவசாயிகள் கைகூப்பி நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...