கோவை வெள்ளியங்கிரி மலையில் ஏற்பட்ட காட்டு தீ அணைப்பு - மீண்டும் மலையேற பக்தர்களுக்கு அனுமதி

கோவை வெள்ளியங்கிரி மலையில் நேற்று மாலை ஏற்பட்ட காட்டுத்தீயை வனத்துறை, தீயணைப்பு துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து இரவு முழுதும் போராடி தீயை கட்டுப்படுத்திய நிலையில், இன்று பிற்பகல் முதல் பக்தர்கள் மலையேற அனுமதி.


கோவை: வெள்ளியங்கிரி மலையில் ஏற்பட்ட காட்டு தீ அணைக்கப்பட்டதால் மீண்டும் பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டனர்.

கோவை மாவட்டம் பூண்டி வெள்ளியங்கிரி மலை தொடரில் 4 மற்றும் 5 ஆவது மலையில் நேற்று மாலை திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் பழங்குடி கிராம மக்கள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இதன் காரணமாக பக்தர்கள் செல்லும் பாதையின் அருகே காட்டு தீ ஏற்பட்டதால் சனிக்கிழமை மாலையில் இருந்து பக்தர்கள் மேலே செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் மலைக்கு சென்றவர்களும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

இதனிடையே இரவு முழுவதும் போராடி இன்று அதிகாலை 4 மணியளவில் காட்டு தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று பிற்பகல் முதல், பக்தர்கள் வழக்கம் போல வெள்ளியங்கிரி மலையில் ஏற அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை பக்தர்கள் மேலே எடுத்துச் செல்கிறார்களா என்பதையும் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...