கோவையில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்ட 2.2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

கோவை கோட்டைபுதூர் அருகே கேரளாவுக்கு கடத்துவதற்காக சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 2.2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், ரேஷன் அரிசி பதுக்கலில் ஈடுபட்ட நிஜாமுதீன் மற்றும் ஜபாருல்லா ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் கோட்டைபுதூர் அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 2.2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழக அரசால் வழங்கப்படும் ரேஷன் அரிசி தொடர்ந்து கேரளாவிற்கு கடத்தப்பட்டு வந்த நிலையில், அதனை கண்காணிக்க குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு கூடுதல் இயக்குனர் அருண் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில், பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் கோவை கரும்புக்கடை, ஜி.எம்.நகர், கோட்டை புதூர் ஆகிய பகுதிகளில் திடீரென ரோந்து சென்று ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கோட்டை புதூர் ஜமீன்தார் நகர் பகுதியை சேர்ந்த ஜபாருல்லா என்பவருக்கு சொந்தமான கார் செட்டில் நின்று கொண்டிருந்த காரை சோதனையிட்ட போது, அதில் தலா 45 கிலோ என 50 மூட்டைகளில் 2.2 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் மேற்கொண்ட தொடர் விசாரணையில் போத்தனூர் திருமலை நகர் பகுதியில் சேர்ந்த நிஜாமுதீன் என்பவர் பல்வேறு பகுதிகளில் சேகரித்த ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்த முயன்றுள்ளார். போலீசாரின் வாகன சோதனை மிகவும் தீவிரமாக இருந்ததால் ஜபருல்லாவிக்கு சொந்தமான கார் செட்டில் ரேசன் அரிசி மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து 2.2 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் அரிசியை பதுக்கி வைத்த நிஜாமுதீன் மற்றும் இடத்தின் உரிமையாளர் ஜபாருல்லா ஆகிய இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...