பொள்ளாச்சியில் குண்டும் குழியுமான சாலைகள் - சாலையில் வாழைமரத்தை நட்டு பாஜகவினர் போராட்டம்

உடுமலை - கோவை சாலையில் தலைமை தபால் நிலையம் முன்பு சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் விபத்து ஏற்படுவதாக கூறி கோவை மாவட்ட தலைவர் பரமகுரு தலைமையில் பாஜகவினர், சாலையின் நடுவே வாழை மரத்தை நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் பல்வேறு பகுதிகளில் சாலைகள் மிகவும் பழுதடைந்து குண்டும் குழியமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.



மேலும், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு ஏழு வருடங்கள் முடிவடைந்த நிலையில் பணிகள் முழுமையாக நிறைவடையாததால் ஆங்காங்கே சாலைகள் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.



இந்நிலையில், போக்குவரத்து அதிகம் உள்ள உடுமலை - கோவை சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு சாலை பல நாட்களாக குண்டும் குழியுமாக காணப்படுவதால் விபத்துக்கள் ஏற்படுவதாக கூறி நகர பாரதிய ஜனதா கட்சியின் கோவை மாவட்ட தலைவர் பரமகுரு தலைமையில், பழுதடைந்த சாலையின் நடுவே வாழை மரத்தை நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி கண்டன முழக்கங்களையும் அவர்கள் எழுப்பியதால் தபால் நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.



பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பாஜகவினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்தப் போராட்டத்தால் கோவை - உடுமலை - பொள்ளாச்சி சந்திப்பு சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...