சீமானை கைது செய்யக்கோரி கோவையில் ஆதித்தமிழர் பேரவை அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் பேரவை அமைப்பின் மாவட்டத் தலைவர் கோபால் தலைமையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: கோவையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவை அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் ஒன்றில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், முதலியார்களைப் பற்றி உயர்வாகவும், அருந்ததியர்கள் ஆந்திராவிலிருந்து தூய்மை பணி செய்வதற்காக விஜயநகர பேரரசால் தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டவர்கள் என்பது போல் பேசியிருந்தார். இது அருந்ததியர் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் சீமானுக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன.



இந்நிலையில் இன்று சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் அலுவலகத்தின் மீது ஆதித்தமிழர் பேரவை அமைப்பினர் கற்களை வீசி சீமானுக்கு எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் சென்னை போரூர் பகுதி முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது.



இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவை அமைப்பினர் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக கோவையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் கோபால் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்டச் செயலாளர் குப்புராஜ், தாமரை வீரன், மல்லேஷ் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சீமானை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். மேலும் சீமான் தமிழ்நாட்டில் சமூக பதட்டத்தை உருவாக்குவதாகவும் அவரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...