உடுமலை நகராட்சியில் பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.5 கோடி மதிப்புள்ள வீட்டு மனை மீட்பு!

உடுமலை நகராட்சியில் பொதுப் பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட ரூ.5கோடி மதிப்பிலான மனைப்பிரிவை நகராட்சிக்கு ஒப்படைக்காமல் உரிமையாளர் தனியாருக்கு விற்பனை செய்ய முயன்ற நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் மீட்டுள்ளதாக, நகர்மன்ற தலைவர் முமத்தீன் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: உடுமலை நகராட்சியில் ரூ.5 கோடி மதிப்புள்ள வீட்டுமனை மீட்கப்பட்டு உள்ளதாக நகர்மன்ற தலைவர் தெரிவித்துள்ளார்.



திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சி எல்லைக்குட்பட்ட பழனி சாலை அருகே உள்ள துரைசாமி மனைப்பிரிவு, நகர் ஊரமைப்பு துறையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு. மனைப்பிரிவு மொத்த பரப்பளவில் பொதுப் பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட 24.00 சென்ட் நிலமானது ரிசர்வ் சைட் என வகைப்பாடு செய்யப்பட்டுள்ளது.



மேற்கண்ட மனைப்பிரிவை உரிமையாளர் நகராட்சிக்கு ஒப்படைக்காமலும், இதனை விற்பனை செய்ய முயற்சி செய்ததை தொடர்ந்து நகராட்சியால் ரிசர்வ் சைட் இடத்தினை மீட்டு பொதுமக்கள் அறியும் வண்ணம் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது.

மீட்கப்பட்ட இடத்தின் மொத்த பரப்பளவு 24.00 சென்ட் ஆகும். இதன் மதிப்பு சுமார் ரூபாய் 5 கோடி ஆகும். இந்த மனை பிரிவு மீட்கப்பட்டு உள்ளதாக நகர்மன்றத் தலைவர் முமத்தீன் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...