முடிந்ததால் என்னை உள்ளே போடுங்கள் பார்க்கலாம்..! - நீதிமன்றத்தில் சேட்டை செய்த குடிமகனால் பரபரப்பு

கோவை போத்தனூரை சேர்ந்த அப்துல் நாசிர், திருட்டு வழக்கின் விசாரணைக்காக மதுக்கரை உரிமையியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது "உங்களால் முடிந்ததால் என்னை உள்ளே போடுங்கள் பார்க்கலாம்" என்று சத்தம் போட்டு தகராறில் ஈடுபட்டதை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் போத்தனுர் பாஜனை கோவில் வீதியை சேர்ந்த ஷேக் இப்ராகிம் என்பவரின் மகன் அப்துல் நாசிர்(வயது28).

திருட்டு வழக்கு குற்றவாளியான இவர், மதுக்கரை உரிமையியல் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தார். அப்போது நீதிமன்ற ஊழியர், குற்றவாளியான அப்துல் நசீரை நீதிபதி முன் ஆஜர்படுத்துவதற்காக அவரின் பெயரை சொல்லி அழைத்துள்ளார்.

குடிபோதையில் நீதிமன்றதிற்கு வந்திருந்த அப்துல் நசீர், ஆத்திரத்துடன் "உங்களால் முடிந்ததால் என்னை உள்ளே போடுங்கள் பார்க்கலாம்" என்று சத்தம் போட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் நீதிமன்ற பணிகள் பாதித்தது. மதுக்கரை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற தலைமை பொறுப்பு எழுத்தர் மனோகரன் இதுகுறித்து மதுக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் மதுக்கரை போலீசார் விரைந்து வந்து நீதிமன்ற ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்ட அப்துல் நசீரை கைது செய்து சிறையில் அடைத்தனர். வாய்தாவில் ஆஜராக வந்த திருட்டு வழக்கு குற்றவாளி ஒருவர் நீதிமன்ற ஊழியர்களிடம் குடிபோதையில் தகராறு செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...