கோவை உக்கடம் அருகே பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் - ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!

உக்கடம் அருகேயுள்ள சாரமேடு பகுதியில் உள்ள மாநகராட்சி துவக்க பள்ளியில் நடைபெற்ற பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாமில், பெண்களுக்கான உரிமைகள், சட்ட பாதுகாப்பு, சொத்துரிமை உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



கோவை: கோவை மாவட்டம் உக்கடம் அருகே நடைபெற்ற பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாமில், பெண்களுக்கான உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர் அறிவுறுத்தலின்படி, தேசிய மகளிர் ஆணையத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில், கோவை உக்கடம் அருகே பின்தங்கிய பகுதிகளை சேர்ந்த பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.



உக்கடம் அடுத்த சாரமேடு பகுதியில் உள்ள மாநகராட்சி துவக்க பள்ளியில் நடைபெற்ற இந்த சட்ட விழிப்புணர்வு முகாமில் கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும் சார்பு நீதிமன்றத்தின் நீதிபதியுமான கே.எஸ்.எஸ்.சிவா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சட்டப்பணிகள் ஆணை குழுவின் செயல்பாடுகள் மற்றும் பெண்களின் உரிமைகள் குறித்து சிறப்புரையாற்றினார்.

இந்த முகாமில் சட்டத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமைகள், பெண் பாதுகாப்பு, சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எம்.ஜே.அபிராமி பெண்களின் உரிமைகள் மற்றும் போக்சோ சட்டம் குறித்து விளக்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவி குழுவினை சார்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...