தமிழகத்தில் பல்வேறு கும்கி ஆப்ரேஷன்களில் வெற்றிகரமாக செயல்பட்டு வந்த கும்கி யானை கலீமுக்கு ஓய்வு - வனத்துறை அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில ஆண்டுகளாக கும்கி ஆப்ரேஷன்களில் வனத்துறைக்கு உதவியாக வெற்றிகரமாக செயல்பட்டு வந்த, கும்கி யானைகளின் அரசன் என அழைக்கப்படும் கலீம் 60 வயதை கடந்ததால் அதற்கு ஓய்வு அளித்து வனத்துறை உத்தரவு.


கோவை: கும்கிகளின் அரசன் என்று அழைக்கப்படும் கலீம் என்ற கும்கி யானைக்கு ஓய்வு அளித்து வனத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப் அருகே கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாம் உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த யானைகள் வளரும் முகாமில் 26 யானைகள் வனத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இங்குள்ள யானைகளுக்கு பாகன்கள் நியமிக்கப்பட்டு கும்கி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலும் இந்த யானைகள் பல்வேறு வன பணிகளுக்கும் வனப்பகுதியை விட்டு வெளியேறி அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை பிடிக்கவும் கும்கிகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.



இதில், குறிப்பாக டாப்சிலிப் கோழிகமுத்தி முகாமில் உள்ள கலீம் என்ற கும்கி யானை தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற பல்வேறு மாநிலங்களில் காட்டு யானைகளை பிடிக்கும் ஆபரேஷன்களில் பங்கெடுத்து வெற்றிகளை பெற்றுள்ளது.



இந்த நிலையில் ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் முதன்மைச் செயலர் சுப்ரியா சாஹீ மற்றும் வனத்துறை முதன்மை தலைமை பாதுகாவலர் சீனிவாச ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



இதைத்தொடர்ந்து, உலாந்தி வனச்சரகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப் அருகே உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமுக்கு அதிகாரிகள் சென்றனர். அங்கு பல்வேறு வனப்பணிகளுக்காகவும், கும்கி ஆப்ரேஷன்களுக்கு, பயன்படுத்தப்பட்டு வந்த 60 வயது பூர்த்தி அடைந்த கும்கிகளின் அரசன் என்று அழைக்கப்படும் கும்கி யானை கலீமுக்கு ஓய்வு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் வனத்துறை உயர் அதிகாரிகள், பாகன்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு யானைக்கு மரியாதை செலுத்தினர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...