உடுமலை அருகே ஒற்றை யானை நடமாட்டம் - 2வது முறையாக பேருந்து கண்ணாடி உடைப்பு!

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே மறையூர் சாலையில் படையப்பா எனும் காட்டு யானையின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இரண்டாவது முறையாக அந்த வழியாக வந்த பேருந்தின் முன்பக்க கண்ணாடியை சேதப்படுத்தியது. பேருந்துக்குள் இருந்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக எல்லை பகுதியில் அமைந்துள்ள மறையூர் பகுதியில் கடந்த சில தினங்களாகவே படையப்பா என்ற ஓற்றைய யானை நடமாட்டம் அதிகரித்துள்ளது.

மேலும், குடியிருப்புகள் பகுதிகளில் சுற்றி திரிந்த யானை, கடந்த இரண்டு தினங்களாக சாலைகளில் உலா வந்து கொண்டுள்ளது.



இந்த நிலையில் இன்று காலையில் உடுமலையிலிருந்து மூணாறு சென்ற கேரளா அரசு பேருந்தை வழிமறித்து நின்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



பின்னர் பேருந்தின் முன்பகுதி பக்கவாட்டு பகுதியில் உருட்டிவிட முயற்சி செய்தபோது பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.



இதனால், உள்ளிருந்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஒரு மணி நேரம் கழித்து கழித்து யானை சாலையைக் கடந்து சென்றதும் பேருந்தில் இருந்த பயணிகள் நிம்மதியடைந்தனர். இதேபோல, கடந்த சில தினங்களுக்கு முன்பும் இரவு நேரத்தில் கேரளா அரசு பேருந்தை இதே படையப்பா என்ற யானை தாக்க முயன்றது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், உடுமலை மூணாறு வழித்தடத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. தொடர்ந்து கண்காணித்து வருகின்றோம். எச்சரிக்கையாக செல்லுமாறு வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

சாலைகளில் யானைகள் நின்றிருந்தால் சோதனைச் சாவடிகளில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. சாலைகளில் வனவிலங்குகள் தென்பட்டால் அருகில் செல்லக்கூடாது. ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தக் கூடாது, என்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...