உலக மகளிர் தினம் - கோவையில் கேக் வெட்டி கொண்டாடிய பெண் ஊடகவியலாளர்கள்!

கோவை மாவட்டத்தில் பல்வேறு ஊடகங்களில் பணியாற்றி வரும் பெண் ஊடகவியலாளர்கள், கோவை பிரஸ் கிளப் அலுவலகத்தில் உலக மகளிர் தினத்தை கேக் வெட்டி உற்சாகமாகக் கொண்டாடினர். அவர்களுக்கு ஆண் ஊடகவியலாளர்கள் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தனர்.


கோவை: சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருவதையொட்டி பெண்களுக்கு பலரும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் பணிபுரியும் பெண்கள் அந்நிறுவனம் சார்பில் கௌரவிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், பல்வேறு துறைகளில் சாதனை புரியும் பெண்களும் கௌரவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மகளிர் தினத்தை ஒட்டி கொண்டாட்ட நிகழ்வுகளும் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு ஆண்டும் கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றம் சார்பாக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கோயமுத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் கோவை மாவட்டத்தில் பல்வேறு ஊடகங்களில் பணியாற்றும் பெண் ஊடகவியலாளர்கள் கேக் வெட்டி மகளிர் தின வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். கோவை மாவட்டத்தில் பணியாற்றி வரும் ஆண் ஊடகவியலாளர்களும், அவர்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...