உலக மகளிர் தினம் - பல்லடம் அரசு பள்ளியில் பெண்களுக்கு சட்ட விழிப்புணர்வு!

மகளிர் தினத்தை ஒட்டி சட்டப்பணிகள் குழு சார்பில் பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகளுக்கு, பெண்களுக்கான சட்டங்கள் குறித்து நீதிபதிகள் சித்ரா, சந்தான கிருஷ்ணசாமி ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாமில் பல்லடம் நீதிபதிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சட்ட பணிகள் குழு சார்பில் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது.



இந்நிகழ்வில் குற்றவியல் மற்றும் நடுவர் நீதிபதி சித்ரா,சார்பு நீதிபதி சந்தான கிருஷ்ணசாமி, மூத்த வழக்கறிஞர் வெங்கடாசலபதி, தலைமை ஆசிரியர் சசிகலா ஆகியோர் கலந்து கொண்டனர்.



இதில் பெண்கள் பாதுகாப்பு குறித்தும், பெண் கல்வி குறித்தும், பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய சட்டங்கள் குறித்தும் பள்ளி குழந்தைகளுக்கு விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் பெண்கள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...