துடியலூர் அருகே ஏர் பேக் திறந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் வீட்டின் மீது மோதி விபத்து!

கோவை கே.என்.ஜி.புதூர் சாலையில் சென்ற கார் ஒன்று மாரியம்மன் கோவில் அருகே இருசக்கர வாகனத்தின் மீது மோதிய நிலையில், திடீரென காரின் ஏர் பேக் திறந்ததால் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது.


கோவை: கோவை மாவட்டம் துடியலூர் அருகே ஏர்பேக் திறந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவில்மேடு தவசி நகர் பகுதியை சேர்ந்தவர் மருதாச்சலம் மூர்த்தி (37). சொந்தமாக தொழில் செய்து வரும் இவர் இன்று பிற்பகல் தனது காரில் கே.என்.ஜி புதூர் பகுதியில் இருந்து ஜி.என்.மில்ஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர் காரை வேகமாக ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மருதாச்சலம் மூர்த்தி கே.என்.ஜி புதூர் மாரியம்மன் கோவில் அருகே வந்தபோது முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளார். இதில் இருசக்கர வாகனத்தில் வந்த ஐயன்(40) என்பவர் படுகாயம் அடைந்தார்.



இந்நிலையில் விபத்தின் போது காரில் இருந்த ஏர் பேக் திடீரென திறந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் வலது புறத்தில் இருந்த வீட்டின் மீது மோதி நின்றது. இதில் நல்வாய்ப்பாக வீட்டின் அருகே இருந்தவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.



இச்சம்பவம் தொடர்பாக துடியலூர் போலீசார் மருதாச்சலம் மூர்த்தி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...