கோவையில் பொதுத்தேர்வு வினாத்தாளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு!

11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்கள் கோவை கொண்டு வரப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் 12 மையங்களில் வினாத்தாள் கட்டுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.


கோவை: கோவை மாவட்டத்தில், 12 மையங்களில் வினாத்தாள் கட்டுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரையிலும், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 14-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5-ம் தேதி வரையிலும் நடைபெறும்.

இதேபோல் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 6ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி கோவை மாவட்டத்தில் 254 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வை 35,541 மாணவர்களும், 11ம் வகுப்பு பொதுத்தேர்வை 34,259 மாணவர்களும் எழுத உள்ளனர். எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வை, 41, 526 மாணவர்கள் எழுத உள்ளனர்.

இதையொட்டி, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்கள் சென்னையில் இருந்து கோவைக்கு அரசு தேர்வுத்துறை மூலம் கொண்டு வரப்பட்டது. இந்த வினாத்தாள்கள் கோவை, பொள்ளாச்சி ஆகிய கல்வி மாவட்டங்களுக்கு வினியோகிக்கப்பட்டது.

இந்த வினாத்தாள்கள் கோவை மாவட்டத்தில் உள்ள 12 ஆவண மையங்களில் பாதுகாக்கப்பட்டுள்ளன. அதன்படி, பொதுத்தேர்வுக்கான இந்த வினாத்தாள்கள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் சீல் வைக்கப்பட்ட அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.

பாதுகாப்புக்காக ஆயுதம் தாங்கிய போலீசார் சுழற்சி முறையில் அங்கு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இதேபோல் கோவை மாவட்டத்தில் மேலும் 11 இடங்களில் வைக்கப்பட்டுள்ள வினாத்தாள் அறைகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்கள் விரைவில் கோவைக்கு கொண்டு வரப்படும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...