துடியலூர் சாய்பாபா கோயில் திருவிழா - 108 பால்குடம் சுமந்து வந்த பெண்கள்!

கோவை துடியலூர் அடுத்த ஜெங்கமநாயக்கன்பாளையம் சுமங்கலி நகரில் உள்ள ஸ்ரீ குபேர ஷீரடி சாய்பாபா கோயிலின் 4 ஆம் ஆண்டு திருவிழாவில் 108 பெண்கள் ஊர்வலமாக கொண்டு வந்த பால்குடங்களை சாய்பாபா மீது ஊற்றி பாலாபிஷேகம் செய்யப்பட்டது.



கோவை: கோவை மாவட்டம் துடியலூர் அருகே சாய்பாபா கோவிலின் 4ஆம் ஆண்டு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

துடியலூரை அடுத்துள்ள ஜெங்கமநாயக்கன்பாளையம் சுமங்கலி நகர் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ குபேர ஷீரடி சாயிபாபா கோவில் உள்ளது. இக்கோவிலின் 4ம் ஆண்டு விழா இன்று காலை விக்னேஷ்வர பூஜை, லட்சுமி குபேர ஹோமம் பூஜையுடன் தொடங்கியது.



இந்த விழாவில் தொப்பம்பட்டி அரசடி ராஜகணபதி கோயிலில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் என 108 பேர் பால் குடம் எடுத்து வந்தனர்.



இந்த பால் குட ஊர்வலமானது தொப்பம்பட்டியில் இருந்து ஜங்கமநாயக்கன்பாளையம் சுமங்கலி நகர் சாய்பாபா கோயிலுக்கு வரும் வழியில் உள்ள மாகாளி அம்மன் கோவிலில் வழிபட்ட பின் கோவிலை வந்தடைந்தனர்.



108 கலச பால்குடங்களை சாய்பாபா மீது ஊற்றி அபிஷேக பூஜை ஆராதனை நடைபெற்றது.



தொடர்ந்து சிறப்பு பூஜைகள் தீபராதனை வழிபாடு நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.



மேலும், இதில் நடைபெற்ற பஜனை பாடல் இசை நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 



பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர்கள் சுரேஷ்குமார், கார்த்தி மற்றும் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...