கோவையில் கழிவுநீர் சாக்கடையில் விழுந்த பசுமாடு - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை!

கோவை சவுரிபாளையத்தில் கழிவுநீர் சாக்கடையில் தவறி விழுந்த பசு மாட்டை, பல மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு கருவிகள் மூலம் சாக்கடையை உடைத்து பத்திரமாக மீட்கப்பட்டது. தீயணைப்புத்துறை வீரர்களுக்கு மாட்டின் உரிமையாளர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.



கோவை: கோவை சவுரிபாளையம் பகுதி அன்னை வேளாங்கண்ணி நகரில் பசுமாடு ஒன்று மேய்ச்சலுக்காக சென்றபோது அங்கிருந்த கழிவுநீர் சாக்கடையில் தவறி விழுந்துள்ளது. சாக்கடைக்குள் விழுந்த பசு மாடு வெளியேற்ற இயலாததால், இது குறித்து உடனடியாக அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.



அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தெற்கு மண்டல தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர், கருவிகள் மூலம் அந்த சாக்கடையை உடைத்து பசுமாட்டை பத்திரமாக மீட்டனர். பின்னர் அந்த மாட்டை தீயணைப்புத்துறையினர் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.



சாக்கடையில் விழுந்த பசுவை பத்திரமாக மீட்டுக்கொடுத்த தீயணைப்புத் மற்றும் மீட்பு பணித்துறையினருக்கு மாட்டின் உரிமையாளர் கண்ணீர் மல்க நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...