கோவையில் கஞ்சா வியாபாரிகள் 2 பேர் கைது - செல்போன், கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்

கோவை, குனியமுத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்த அசாருதீன், சர்புதீன் என இருவரை போலீசார் கைது செய்து, கஞ்சா பொட்டலங்கள், இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்தனர். மேலும் முஜிபுர் ரஹ்மான் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை மாநகர பகுதிகளில் கஞ்சா புழக்கத்தை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில் அமைக்கப்பட்ட தனிப்படை போதைப் பொருள் வியாபாரிகளை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூரில் இரண்டு கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.

கோவை குனியமுத்தூர் உயர்நிலைப்பள்ளி பின்புறம் குறிச்சிகுளம் அமைந்துள்ளது. குளக்கரை அருகே அரசு உயர்நிலை பள்ளி ஒன்றும் இயங்கி வருகிறது. பள்ளியின் பின்புறம் சிலர் கஞ்சா விற்பதாக குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அங்கு கஞ்சா விற்று வந்த இருவரை பிடித்தனர்.

காவல்துறை விசாரணையில், இருவரும் பிஸ்மி நகரைச் சார்ந்த அசாருதீன் (வயது30), லவ்லி கார்டன் பகுதியைச் சார்ந்த சர்புதீன் (வயது32) என்பது தெரியவந்தது. ஓட்டுநராக இவர்கள் பணியாற்றி வரும் நிலையில், கஞ்சா வியாபாரத்திலும் ஈடுபட்டுவந்தது உறுதியானது. இதில் அசாருதீன் மீது ஏற்கனவே பந்தய சாலை மற்றும் பஜார் காவல் நிலையங்களில் போதை பொருள் விற்றதாக வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில், இவர்களுக்கு கஞ்சா பொட்டலங்களை மொத்தமாக தந்து வியாபாரத்தில் ஈடுபடுத்தி வரும் முஜிபுர் ரஹ்மான் என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். தற்போது கைதான நபர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள், இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கஞ்சா வியாபாரிகளுக்கு எதிரான வேட்டை தீவிரப்படுத்தப்படும் என கோவை போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...