கனிமவளக் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்..! - கோவையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்தப்படுவதை தமிழக அரசு தடுக்க வேண்டும். இல்லாவிடில் மீண்டும் போராட்டம் நடக்கும் என்று கோவை எட்டிமடை பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.



கோவை: கடந்த இரு மாதங்களுக்கு முன் தமிழ்நாடு எல்லைப் பகுதிகளில் இருந்து கேரள மாநிலத்திற்கு கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக பல்வேறு வீடியோக்கள் வெளியானது.

அதிலும் குறிப்பாக கோவை மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு அதிகப்படியான கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக பல்வேறு விவசாய சங்கங்கள் அரசியல் கட்சியினர் புகார் தெரிவித்து ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று எட்டிமடை பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



அச்சங்கத்தின் தலைவர் சு.பழனிச்சாமி தலைமையில் சுமார் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் இதில் பங்கேற்றனர்.



ஆனால் முதலமைச்சர் வருகையையொட்டி மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டதற்கிணங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளதாகவும் கூறி கண்டன முழக்கங்கள் எழுப்பாமல் அமைதி வழியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில் கனிம வள கொள்ளையை தடுப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்ப்பட்டது.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிச்சாமி, கனிமவள கொள்ளை தடுக்கப்பட வேண்டும். தனி வசூலை நிறுத்த வேண்டும். இயற்கையை பாதுகாக்க வேண்டும். அனுமதியின்றி செயல்படும் கல்குவாரிகளை தடுக்க வேண்டும். இது போன்ற செயல்களால் நிலநடுக்கம், நிலச்சரிவு வரும் பட்டியலில் கோவை இருந்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் கனிமவளக் கொள்ளையை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் மீண்டும் போராட்டம் மேற்கொள்வோம், என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...