கலைஞரின் மகன் என்பதால் மட்டும் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவில்லை, உழைப்பால் வந்தவர் - அமைச்சர் காந்தி பாராட்டு

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் காந்தி, பேரறிஞர் அண்ணா, கலைஞரை தொடர்ந்து நெசவு தொழிலுக்கு முக்கியத்துவம் தந்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என்றும், நெசவுத் தொழிலை காப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தான் முடியும் எனவும் கூறினார்.


கோவை: கலைஞரின் மகன் என்பதால் மட்டும் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவில்லை, ஒவ்வொரு பொறுப்பிலும் கடுமையாக உழைத்து வந்தவர் என அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் தமிழ்நாடு விசைத்தறி கைத்தறி நெசவாளர் சங்கம் சார்பில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கைத்தறித்துறை அமைச்சர் காந்தி கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் அவர் பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று 22 மாதங்கள் தான் ஆகிறது. அவர் பொறுப்பு ஏற்கும் பொழுது தமிழ்நாடு கொரோனா நிலைமையில் இருந்தது. அதன்பின் முதல்வரின் நடவடிக்கையால் கொரோனா இல்லை என்ற நிலைமை தமிழ்நாட்டிற்கு வந்தது.

கொரோனா முதல் முதலில் வரும்போது, எதிர்க்கட்சித் தலைவராக சில கோரிக்கைகளை முன் வைத்தார். குடும்பத்திற்கு 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தார். பின்னர் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பு 4000 ரூபாயை பொது மக்களுக்கு வழங்கினார்.

நெசவுத் தொழிலுக்கு முக்கியத்துவம் அளித்தது அண்ணா, அதனை தொடர்ந்து கலைஞர் அடுத்து நமது முதல்வர் தான் வழங்கியுள்ளார். இவரையடுத்து யாரும் இதுபோன்று முக்கியத்துவத்தை தர இயலாது.

மேலும் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகனாக இருப்பதால் மட்டும் முதலமைச்சர் ஆகவில்லை, சிறுவயதில் இருந்து தன்னை அரசியலில் ஈடுபடுத்திக் கொண்டு ஒவ்வொரு பொறுப்பிலும் சிறப்பாக பணியாற்றி முதலமைச்சராக வந்தவர். நமது நெசவுத் தொழிலை காப்பதற்கு நமது முதலமைச்சரால் தான் முடியும்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...