கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் பேரூர் குளக்கரையில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடல்

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், பேரூர் பெரியகுளத்தில் ஆறாண்டுகளுக்கு முன்பு துவங்கிய முதல் வார களப்பணியின் வெற்றியைத் தொடர்ந்து இன்று மூன்றாவது கட்டமாக 2ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.



கோவை: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், பேரூர் பெரியகுளத்தில், மூன்றாவது கட்டமாக 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது.



கோவை பேரூர் பெரியகுளத்தில் ஆறாண்டுகளுக்கு முன்பு துவங்கிய முதல் வார களப்பணி, அக்குளத்தைத் தூர்வாரி பின்பு செங்குளம் வெள்ளலூர் குளம் தூர்வாருதல், 10 குட்டைகளைத் தூர்வாரி நீர் கொண்டுவந்து சேர்க்கும் பணி, மியாவாக்கி குறுங்காடுகளை உருவாக்குதல், வாய்க்காலைத் தூர்வாரி கண்காணித்தல், குளக்கரையில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுதல், அணைக்கட்டுகளில் களப்பணி செய்தல், கல்லூரி, பள்ளி மாணவ மாணவியர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், போன்ற நீர் நிலைகளுக்கான தன்னார்வப் பணி தற்போது 278 வாரங்களை எட்டியுள்ளது.



நமது நகரின் பசுமை பரப்பளவை அதிகரிப்பது தற்போதைய காலத்தில் அவசியமாக இருக்கிறது.



அதனைக் கருத்தில் கொண்டு நீர்நிலைகளின் கரைகளில், நகரின் பல்வேறு பகுதிகளில் மாயாவாக்கி முறையில் அடர் வனங்களை உருவாக்கி வருகிறோம்.



நகரின் பிரதானமான நீர் நிலையாக உள்ள பேரூர் பெரிய குளத்தின் கரையில் ஏற்கனவே இரண்டு கட்டங்களாக 3,500 மரங்களைக் கொண்ட குறுங்காட்டை உருவாக்கியுள்ளோம்.



தற்போது மூன்றாவது கட்டமாக 2000 மரக்கன்றுகளை நடும் பணி இன்று (ஞாயிறு) காலை 7 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது. இந்த பணிக்காக நிதி உதவி ZF Windpower, Coimbatore pvt Ltd நிறுவனம் வழங்கியுள்ளது.



இந்த நிகழ்வில் திரளான பொதுமக்களும், தன்னார்வலர்களும், கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரி, ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களும் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டுவைத்தனர்.

















Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...