ஆஸ்கர் விருதை வென்ற ‘தி எலிபென்ட் விஸ்பர்ஸ்’ ஆவணப்பட இயக்குநருக்கு அவரது ஆசிரியர் வாழ்த்து!

கோவை ஜிஆர்டி கலை அறிவியல் கல்லூரியில் படித்த ஆவணப்பட இயக்குநர் கார்த்திகி கோன்சால்வஸ் இயக்கிய ‘தி எலிபென்ட் விஸ்பர்ஸ்’ என்ற ஆஸ்கர் விருதை பெற்றுள்ள நிலையில், அவரது ஆசிரியை ராதா வாழ்த்துக்களை கூறியதுடன் பெருமையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.



கோவை: ஆஸ்கர் விருது பெற்ற ‘தி எலிபென்ட் விஸ்பர்ஸ்’ என்ற ஆவணப்பட இயக்குனர் கார்த்திகி கோன்சால்வஸுக்கு அவரது ஆசிரியர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திரை உலகில் மிகவும் உயரிய விருதாக பார்க்கப்படுவது ஆஸ்கர் தான். அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2023 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா, உலக திரை நட்சத்திர பட்டாளங்களுடன் வெகுவிமரிசையாக அரங்கேறியது.

இந்நிலையில் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது.

இதேபோல், முதுமலையை சேர்ந்த யானை பாகன் தம்பதியை மையமாக கொண்ட, தி எலிபென்ட் விஸ்பர்ஸ் என்ற ஆவண படம் சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. தாயைப் பிரிந்த குட்டியானைகளை காப்பாற்றிய முதுமலை பாகன் தம்பதி குறித்த ஆவண குறும்படமான தி எலிபென்ட் விஸ்பர்ஸ் படத்திற்கு ஆஸ்கர் மகுடம் சூட்டப்பட்டது

இந்திய - அமெரிக்க பெற்றோருக்கு பிறந்த ஆவணப்பட இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் மற்றும் தயாரிப்பாளர் குனீத் மோங்கா உள்ளிட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில் பாராட்டு மழையில் நனைந்து வரும் ஆவணப்பட இயக்குநர் கார்த்திகிக்கு, அவரது கல்லூரி ஆசிரியை நெகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூரில் உள்ள ஜிஆர்டி கலை அறிவியல் கல்லூரியில் 2004-2007 ஆம் ஆண்டில் ஆஸ்கர் நாயகி, கார்த்திகி இளங்கலை விஷுவல் கம்யூனிகேஷன் படித்திருக்கின்றார். படிக்கும்போதே சிறந்த மாணவியாக திகழ்ந்த கார்த்திகி கடுமையான உழைப்பாளி.

இவர் 6 வருடமாக தெளிவான திட்டமிடலின் மூலமாக இந்த ஆவணப்படத்தை திறம்பட இயக்கினார். இவரின் இந்த இடைவிடாத முயற்சிக்கு ஆஸ்கர் தந்த மகுடத்தை பார்த்து பெருமை கொள்வதாக தெரிவித்திருக்கின்ற, அவரின் கல்லூரி ஆசிரியை ராதா ஆஸ்கர் நாயகி ஆவணப்பட இயக்குநர் கார்த்திகிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...