கோவையில் சிஆர்பிஎப் பயிற்சி கல்லூரியில் ராணுவ வீரர்கள் சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவியேற்பு

கோவை ராக்கிபாளையம் பிரிவு சிஆர்பிஎப் பயிற்சி கல்லூரியில் சப்-இன்ஸ்பெக்டர் பயிற்சி முடித்த 19 ராணுவ வீரர்களுக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது. சி.ஆர்.பி.எப் பயிற்சி கல்லூரியின் ஐ.ஜி மற்றும் முதல்வர் அஜய் பரதன் கலந்துக் கொண்டு வீரர்களின் அணிவகுப்பு, மரியாதை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு பேட்சுகளை வழங்கி கெளரவித்தார்.



கோவை: ராக்கிபாளையம் பிரிவு சிஆர்பிஎப் பயிற்சி கல்லூரியில் சப்-இன்ஸ்பெக்டர் பயிற்சி முடித்த 19 ராணுவ வீரர்களுக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது.

இந்தியா ராணுவம், விமானத்துறை மற்றும் கப்பற்படையில் பணியாற்றி முடித்த 45 வயது பூர்த்தி அடையாத வீரர்கள் மீண்டும் சி.ஆர்.பி.எப்-ல் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து கோவை சி.ஆர்.பி.எப் பயிற்சி கல்லூரியில் 95ஆவது பேட்சில் சப்-இன்ஸ்பெக்டர்களாக சேர 11 ராணுவ வீரர்கள், 5 விமானத்துறை வீரர்கள், 3 கப்பற்படை வீரர்கள் கலந்துக்கொண்டு கடந்த 2 மாதங்களாக பயிற்சி பெற்று வந்தனர்.



பயிற்சி முடித்த அவர்களுக்கு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. அதற்காக நடைபெற்ற விழாவில், கோவை சி.ஆர்.பி.எப் பயிற்சி கல்லூரியின் ஐ.ஜி மற்றும் முதல்வர் அஜய் பரதன் கலந்துக் கொண்டு வீரர்களின் அணிவகுப்பு, மரியாதை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு பேட்சுகளை வழங்கி கெளரவித்தார்.



முன்னதாக கமெண்டண்ட் ராஜேஷ்குமார் உறுதிமொழி வாசிக்க பதவியேற்ற வீரர்கள் தங்கள் கைகளை நீட்டி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து இந்தியா தேசிய கொடி மற்றும் சி.ஆர்.பி.எப் கொடி முன்பும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.



தொடர்ந்து அவர்களுடன் ஐ.ஜி. குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார்.



இந்த விழாவில் டி.சி. ராஜேஷ் டாக்ரா, அசிஸ்டண்ட் கமெண்டண்ட் கிசோர்குமார் உட்பட சி.ஆர்.பி.எப் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். பதவி ஏற்றுக்கொண்ட 19 சப்-இன்ஸ்பெக்டர்களும் ஜம்மு-காஷ்மீர், சண்டிகர் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் பணியாற்ற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...