கோவையில் சாலையில் நடந்து சென்றவரிடம் கத்திமுனையில் பணம் பறிப்பு - சர்வர் கைது

கோவை உக்கடம் பகுதியில் பணி முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்த பைசல் என்பவரை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த புதுக்கோட்டை சேர்ந்த சர்வர் குமரேசன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை உக்கடம் ஜி எம் நகர் பகுதி சார்ந்தவர் பைசல். இவர் பழக்கடையில் கூழிதொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றார். இந்த நிலையில். இவர் தனது வேலையை முடித்துவிட்டு ஈஸ்வரன் கோயில் வீதியில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த ஒரு நபர், அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார்.தான் கூலித் தொழிலாளி என்றும், தன்னிடம் பணம் இல்லை என்று ஃபைசல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில், அந்த நபர் கத்தி முனையில் பைசலின் பாக்கெட்டில் இருந்த பணத்தை பறித்துச் சென்றார்.

இதுகுறித்து பைசல் உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர்.

விசாரணையில் அந்த நபர் புதுக்கோட்டை சேர்ந்த குமரேசன் என்பது தெரியவந்தது. ஓட்டல் ஒன்றில் சர்வராக வேலை செய்வந்த குமரேசன், வழிப்பறியில் ஈடுபட்டது உறுதியானதால், அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...