அரசு விடுதி மாணவர்களுக்கு வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி

கோவை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், பத்தாம் வகுப்பு மாணவர்கள் 214, 12ஆம் வகுப்பு மாணவர்கள் 186 மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் 630 என மொத்தம் 1030 மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

கோவை ரேஸ்கோர்ஸ் அருகில் உள்ள நிர்மலா பெண்கள் கல்லூரி வளாக கூட்ட அரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரியங்கா முன்னிலை வகித்தார்.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜோதிமணி மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும சிறுபான்மையினர் நல அலுவலர் ப.சுரேஷ் ஆகியோர்களால் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான விளக்க கண்காட்சி நடத்தப்பட்டது.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...