கோவை சிங்காநல்லூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அதிரடி

கோவை சிங்காநல்லூர் நெடுஞ்சாலைப் பகுதியில் சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகளை காவல்துறை உதவியுடன் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அகற்றினர். மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படாமல் தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை செல்லும் சாலையில் நடந்து செல்பவர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும், பெரும் இடையூறாக நிறைய ஆக்கிரமிப்புகள் இருந்தது.

இந்த சாலை எப்பொழுதும் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலை. நிறைய ஆக்கிரமிப்புகள் இருந்ததால் விபத்துகள் அடிக்கடி ஏற்பட்டு வந்தது.



இது சம்பந்தமாக பொதுமக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று நேற்று சிங்காநல்லூர் காவல்துறையினரின் பாதுகாப்போடு தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

இந்நிலையில், இந்தப் பகுதியில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் நடைபெறாமல் தடுக்ககாவல்துறை கண்காணிக்க வேண்டும் என்று ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்க தலைவர் லோட்டஸ் மணிகண்டன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...