ரயில்பாதையில் கண்காணிப்பு கேமிராக்கள் - யானை இறப்பைத் தடுக்க வனத்துறை தீவிரம்!

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் ரயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பதைத் தடுக்கும் வகையில், அப்பகுதிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்துவதற்கான ஆய்வுப் பணிகளை மதுக்கரை வனத்துறையினர் மேற்கொண்டனர்.



கோவை: கோவையில் இருந்து மதுக்கரை வழியாக பாலக்காடு மற்றும் கேரள மாநிலத்திற்கு செல்லும் ரயில்கள் மதுக்கரைக்கு உட்பட்ட சோளக்கரை வணப்பகுதியில் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறது.

இந்த வனப்பகுதிக்குள் இருக்கும் ரயில் பாதையை கடக்கும் போது சில சமயங்களில் ரயிலில் அடிபட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகள் உயிரிழக்க நேரிடுகிறது. சில மாதங்களுக்கு முன்பு இந்த வனப்பகுதியில் இருந்த இரண்டு யானைகள் ரயில் பாதையை கடக்கும்போது ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தன.

இதனால் வன விலங்குகள் ரயிலில் அடிபட்டு இறப்பதை தடுக்க வேண்டும் என இந்த பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர். இதனைத்தொடர்ந்து ரயில் பாதைக்கு வராமல் யானைகள் மற்றும் வன விலங்குகள் கடந்து செல்லும் வகையில் பாலம் அமைத்து பாதை ஏற்படுத்தி தரவும் ரயில் பாதைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தவும் ரயில்வே துறை முடிவு செய்தது.



அதற்காக யானைகள் அடிக்கடி கடக்கும் பகுதியான சோளக்கரை பகுதியில் ரயில் பாலம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு பாலம் கட்டும் துவங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.



இந்த நிலையிலே சோளக்கரை வனப்பகுதியில் உள்ள ரயில் பாதையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்காக வந்துள்ள ரயில்வே தொழில்நுட்ப துறை அதிகாரிகள், மதுக்கரை வனப்பகுதி ரேஞ்சர் சந்தியா தலைமையில் அந்த பகுதிக்கு சென்று எங்கெங்கு கேமராக்கள் பொறுத்த வேண்டும் என்று பார்வையிட்டனர்.

விரைவில் சோளக்கரை வனப்பகுதியில் உள்ள ரயில் பாதையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி துவங்க உள்ளது. இந்த பணி நிறைவடையும் நிலையில் யானை உயிரிழப்புகளை தடுக்கும் பொருட்டு விபத்தை தவிர்க்க முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...